அனைவருக்கும் வணக்கம்,
நம்மில் பலரும் சில இக்கட்டான சூழ்நிலையில் உபயோகிக்கும். சில சொற்களில் இந்த தர்மசங்கடம் என்ற சொல்லும் கண்டிப்பாக இடம்பெறும். அனேகமாக இந்த சொல்லை உபயோகிக்கும் நம்மில் பலருக்கு இதன் உண்மையான அர்த்தம் தெரியாது. இந்த சொல் எப்படி வந்தது. இந்த சொல்லை எந்த மாதிரியான சம்பவங்களுக்கு பயன் படுத்தலாம். என்பதை ஒரு கதையின் மூலம் நாம் அறிந்துகொள்ளலாம்.
நம்மில் பலரும் சில இக்கட்டான சூழ்நிலையில் உபயோகிக்கும். சில சொற்களில் இந்த தர்மசங்கடம் என்ற சொல்லும் கண்டிப்பாக இடம்பெறும். அனேகமாக இந்த சொல்லை உபயோகிக்கும் நம்மில் பலருக்கு இதன் உண்மையான அர்த்தம் தெரியாது. இந்த சொல் எப்படி வந்தது. இந்த சொல்லை எந்த மாதிரியான சம்பவங்களுக்கு பயன் படுத்தலாம். என்பதை ஒரு கதையின் மூலம் நாம் அறிந்துகொள்ளலாம்.
தர்மரின் சங்கடம்
மகாபாரதத்தில் கௌரவர்கள் மற்றும் பாண்டவர்கள் என்ற இரண்டு பிரிவினர்கள் இருந்தார்கள். என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இதில் பாண்டவர்கள் பிரிவில் மூத்தவரான தர்மர் ஒருநாள் தனிமையில் இருக்க வேண்டி காட்டுக்குள் தனியாகச் சென்றுகொண்டிருந்தார். கட்டுக்குள் நீண்ட தூரம் சென்று விட்டார். அப்போது அங்கு இரண்டு காட்டுவாசிகள் மிகவும் சிரமப்பட்டு தங்களின் உணவுக்காக சில ஆமையை நெருப்பில் போட்டு வேகவைக்க முயற்சி செய்து கொண்டிருதார்கள். இதை அருகில் சென்று கவனித்த தர்மருக்கு சங்கடமாக இருந்தது. அந்த காட்டுவசிகளுக்கு கடுமையான பசி அதன் பொருட்டே அவர்கள் அந்த ஆமைகளை உணவாக்க நினைத்தார்கள். ஆனால் அந்த ஆமைகளை நெருப்பில் அவர்கள் போட்டவுடன் அந்த ஆமைகள் நெருப்பை விட்டு வெளியே வந்துவிடுகிறது. அவர்கள் மீண்டும் நெருப்பில் இடுவதும் அந்த ஆமைகள் நெருப்பை விட்டு வெளியே வருவதும் என மீண்டும்... மீண்டும்... அந்த சம்பவம் நடந்து கொண்டே இருந்தது. அதை அங்கிருந்து கவனித்துக்கொண்டிருந்த தர்மர் எதுவும் கூறாமல் அங்கிருந்து கிளம்பி விட்டார். சரி இதில் தர்மருக்கு என்ன சங்கடம்? அந்த காட்டுவாசிகளுக்கு பயங்கரமான பசி அதை தீர்த்து வைக்கும் பொறுப்பு தர்மருக்கு இருக்கிறது. அதற்காக அவர் அந்த காட்டு வாசிகளுக்கு அந்த ஆமைகளை மல்லாக்க போட்டு வேகவையுங்கள் என்று கூறினால் போதும் அவர்கள் பசி ஆறிவிடும் (ஆமையை மல்லாக்க கவிழ்த்துப் போட்டால் அதனால் திரும்ப முடியாது. மேலும் ஆமையின் முதுகு ஓடு மிகவும் வலிமையானது. தீயில் வெந்தாலும் ஓடு எரியாது. ஆனால் மற்ற பாகங்கள் வெந்து உணவாக, அந்த ஓடே சட்டி போன்று பயன்படும்.) இந்த சூச்சுமத்தை தர்மர் அந்த காட்டுவசிகளுக்கு கூறியிருந்தால் அவர்களின் பசி தீர்ந்து இருக்கும். ஆனால் அவர் சொல்லவில்லை காரணம் அந்த ஆமைகளின் உயிரை காக்கும் பொறுப்பும் தர்மருடையதுதான். ஏனென்றால் தர்மர் எமதர்மராஜாவின் அவதாரம் இந்த இரண்டு விசயத்தில் அவர் யாருக்கு உதவ முடியும். தர்மருக்கு நேர்ந்த இந்த இக்கட்டான சங்கடத்தையே தர்மர் சங்கடம் என்று கூறப்பட்டது. இதுவே பிற்காலத்தில் மருவி தர்மசங்கடம் என்ற சொல்லாகி விட்டது.
நன்றி மீண்டும் சந்திப்போம்.
1 comment:
தவறு
Post a Comment