கடவுள் மீது நம்பிக்கை வைப்பது சரியா?
இதைப்பற்றி ஆராய்ந்தால், கடவுளை இதுவரை யாரெல்லாம் பார்த்து இருக்கிறார்கள்.
நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா??????
நானும் பார்த்தது இல்லை?????
நீங்களும் பார்த்தது இல்லை நானும் பார்த்தது இல்லை ஆனால் நம்புகிறோம், சரி கடவுளை பார்க்க முடியாது. உணரத்தான் முடியும். என்று பலர் கூறியும் வாதாடியும், பார்த்தும் இருக்கிறேன், கேட்டும் இருக்கிறேன். சரி உங்கள் வழிக்கே வருகிறேன். நீங்கள் கடவுளை உணர்ந்து இருக்கிறீர்களா??? நானும் உணர்ந்ததது இல்லை? சரி பிறகு எப்படித்தான் கடவுள் இருப்பதை உறுதி செய்து கொள்வது... என்னிடம் பல கேள்விகள் உண்டு, அதில் சிலவற்றை உங்களிடம், பகிர்ந்து கொள்கிறேன்.
கேள்வி எண் (1) பிறப்பு எங்கே நிர்ணயிக்கப் படுகின்றது ?
கேள்வி எண் (2) இறப்பு எங்கே நிர்ணயிக்கப்படுகின்றது ?
கேள்வி எண் (3) சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை யார் நிரனயித்தது ?
கேள்வி எண் (4) இந்த உலகம் எப்படி இயங்குகின்றது. யார் அதை இயக்குவது?
கேள்வி எண் (5) காற்று இருப்பது உண்மை அது எங்கிருந்து வருகிறது?
கேள்வி எண் (6) நீர் இருப்பது உண்மை அது எப்படி உருவானது?
கேள்வி எண் (7) நெருப்பு இருப்பது உண்மை அது எங்கிருந்து உருவாகின்றது?
கேள்வி எண் (8) உயிர் என்பது எது ?
கேள்வி எண் (9) நல்லது எது? கேட்டது எது?
கேள்வி எண் (10) விதை இருக்கிறது. மரம் அதற்குள் எங்கே இருந்தது?
இன்னும் பல கேள்விகள் இருக்கின்றன. மரியாதையை நிமித்தமாக இத்துடன் எனது கேள்விகளை நிறுத்திக்கொள்கிறேன்.
மேலே நான் கேட்ட கேள்விகள் எனக்குள் எழுந்தது, நானும் பல வழிகளில் விடை தேடிப்பார்த்தேன். அறிவியலும் பல விளக்கங்கள் தந்தது. ஆனால் உண்மையான விளக்கம் யாராலும் தர முடியவில்லை. எல்லாம் ஒரு லிமிட் தான்.
அப்போது தான் என்னால் ஒத்துக் கொள்ள முடிந்தது. நமக்கும் மேல் எதோ ஒரு சக்தி இருக்கிறது. அது ஏன் கடவுளாய் இருக்ககூடாது.
சரி ஒருவழியா... கடவுள் இருக்காரா இல்லையாங்கிறத பட்டி மன்றத்துல சொல்ற தீர்ப்பு மாதிரி சொல்லி முடிச்சாச்சு.
சரி கடவுளை நம்புவது சரியான்கிற தலைப்ப பத்தி பேசவே இல்லையே இதோ இப்ப பேசிடுவோம்...
கவுன்ட் ஸ்டார்ட்
1....
2....
3....
4....
5....
6....
7....
8....
9....
10....
நம்பிக்கைதான் சார் சார் வாழ்க்கை இன்னைக்கு படுத்து தூன்குறோம்... நாளைக்கு எப்படி எழுந்திருப்போம்ன்னு எப்படி நம்பி தூன்குரோமோ அப்படித்தான். நாம கடவுளையும் நம்பனும். நம்பித்தான் ஆகணும்
வேற வழியே இல்லை....
உதாரணத்திற்கு இந்த உலகத்துல 97% தண்ணீர் 3% தான் மண்ணும், கல்லும், அதுல கூட நாம கொஞ்ச இடத்துலதான் வழ்துட்டு இருக்கோம். 97% தண்ணியில கொஞ்சம் தலும்புனாக் கூட நாம எல்லாரும் காலி ஆனாலும் எந்த நம்பிக்கையில வாழ்த்துட்டு இருக்கிறோம். அதுமாதிரித்தான் கடவுளையும் நம்பனும்.
இன்னும் நிறைய உதாரணம் இருக்கு. அதெல்லாம் நமக்கு இப்போதைக்கு இது போதும்னு நினைக்கிறேன். இன்னும் நிறைய உதாரணம் வேணும்னு நினைக்கிறவங்க பின்னுட்டத்துல கேளுங்க பதில் தறேன்.
அன்புடன்
சிறுதுளி
No comments:
Post a Comment