2.27.2010

உங்கள் வாழ்க்கை உங்கள் எண்ணத்தில்தான் இருக்கிறது - பகுதி 2



 
இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு மனிதனும், எவ்வாறு வெற்றி கொள்வது  என்று முயன்று கொண்டிருக்கிறார்கள்.

அதில் ஒரு சிலருக்கு வெற்றி கிடைக்கிறது.
பலருக்கு கிடைக்காமலேயே போகிறது.

பொதுவாக வெற்றி பெற்றவர்களை பற்றி பேசும் பொழுது நாம் அனைவரும் கூறுவது. அவனிடம் பணம் இருக்கிறது, யோகக்காரன், அதிர்ஷ்டக்காரன், அவனுக்கு கிடைத்த மாதிரி தாய், தந்தை எனக்கு கிடக்கவில்லை, அவனது உறவினர்கள் அனைவரும் நல்ல பதவியில் இருக்கிறார்கள் அவர்களுடைய உதவியும் அவனுக்கு நல்ல முறையில் கிடைக்கிறது. அதனால் தான் அவன் வெற்றி பெற்றான்.

எங்களுக்கும் அவனைப்போல அமைந்தால் நாங்களும் வெற்றிபெறுவோம். என்று மூச்சு விடாமல் கட கடவென பேசிமுடித்து விட்டு மேலும் அதை எப்படியெல்லாம் சொல்லி நமது மனதுக்கு ஆறுதலை தேடிக்கொள்ள முடியுமோ அப்படியெல்லாம் சொல்லிவிட்டுத்தான் மறுவேலையைப் பார்ப்போம். (இதையே நாம் வேறு கோணத்தில் பார்ப்போமானால் மேலே சொல்லியவை எவையுமே இல்லாமல் முன்னேறியவர்கள் பலர் உண்டு)

இதுமாதிரியான பேச்சுக்கள் நமக்கு அந்த நேரத்தில் நம் மனதுக்கு ஆறுதலைத் தந்தாலும் முடிவில் நஷ்டம் என்னவோ நமக்குத்தான்.

சரி ஒரு சிலரால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்றால் நம்மால் வெற்றி பெற முடியதா?

ஏன் முடியாது.

முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்ற பழமொழி நாம் அனைவரும் அறிந்ததே.

இருந்தாலும் வெற்றிப் பெற்றவர்களுக்கு கிடைத்த மாதிரியான வாய்ப்புகள் நமக்கும் கிடைக்குமா?

அவர்களுக்கு இருந்த யோகமும், அதிர்ஷமும் நமக்கு இருக்குமா?

வெற்றிபெற்றவர்களைப் போல் நம்மாலும் சாதிக்கமுடியுமா?

அப்படியே சாதிக்க நினைத்தாலும் அதற்கான நிதியுதவி கிடைக்குமா?

நாம் துவங்கும் தொழில் மூலம் முன்னேற்றம் கிடைக்குமா?

இதுபோன்ற எதிர்மறையான விசயங்களை பற்றியே நாம் யோசித்துக் கொண்டிருந்தால் நாம் எப்போது வெற்றி பெறுவது.

முயற்சி மட்டும் தான் நம்முடையது.

அதற்கான முடிவையெல்லாம் நமக்கும் மீறிய சக்திகள் பார்த்துக்கொள்ளும்.

இப்போது நாம் யோசிக்க வேண்டியதெல்லாம் நம்மிடம் என்ன திறமை இருக்கிறது.
அதை எப்படி வெளிக்கொண்டுவருவது.

அப்படி வெளிக்கொண்டு வருவதை எப்படி சந்தையில் பணம் பண்ணுவது என்பதைப் பற்றிதான்.

இதைத்தான் நான் உங்கள் வாழ்க்கை உங்கள் எண்ணத்தில்தான் இருக்கிறது.
என்று கூறுகிறேன்.

மீண்டும் இதைப்பற்றி பேசுவோம்

வாழ்வோம் வளமுடன்...
என்றும் அன்புடன்....
சிறுதுளி


மேலும் அடுத்த பதிவில்: முன்னேற்றத்திற்கான விதிமுறைகள் என்னென்ன?
சாதித்தவர்களின் சாதனை பயணம் எப்படி இருந்தது? மேலும் பல சுவையான சம்பவங்களையும், நல்ல கதைகளையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ளாலாம் என்றிருக்கிறேன்.

2 comments:

guru said...

ungal katturai arumai aduththa pathivai ethirpparkkindren


ivan
yogappuththiran

guru said...

aduththa vetrikkaana ('vetri kaana') vazhiyai ethirparkkindren



ivan
yogappuththiran