11.21.2010

அதி புத்திசாலிகள்.!!!


ஒரு சாலையில், எழுபது பேர் கொண்ட ஒரு குழு. பெரிய மூட்டை ஒன்றை தூக்க முடியாமல், திக்கி, திணறிகொண்டு, ஊர்ந்து சென்று கொண்டிருந்தது.

அதை எதிரே தூரத்தில், வந்து கொண்டிருந்த ஞானி கவனித்தார்.

சிறிது நேரத்தில்...

அந்த ஞானி, அந்த குழுவின் அருகில் வந்துவிட்டார்.

வந்த அவர். அதில் ஒருவனிடன்.

“தம்பி எங்கிருந்து வருகிறீர்கள். இதை சுமையை சுமந்து கொண்டு எங்கே செல்கின்றீர்கள்.”

என்று வினவினார்.

அதற்கு. அந்த இளைஞன்.

“சாமி நாங்கள் இந்த சுமையை பக்கத்து ஊர் சந்தையில் இருந்து சுமந்து வருகிறோம்.”

“இப்போது எங்கள் சொந்த ஊரை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். என்றும். மேலும் நாங்கள் பொழுது சாய்வதற்குள் ஊர் போய்சேரவேண்டும். எனவே எங்களுக்கு உங்களிடம். பேசுவதற்கு நேரமில்லை”

என்றும் கூறினான்.

“நீ சொல்வது சரிதான் தம்பி” “உங்களுக்கு என்னால் முடிந்த உதவியை செய்யலாம். என்றுதான் தம்பி கேட்டேன்.”

“என்ன சாமி”

“நீங்களும் எங்க கூட சேர்ந்து இந்த மூட்டையை தூக்கிட்டு வரப்போறீங்க்களா சாமி”

“இல்ல தம்பி.. உங்க அளவுக்கு என் உடம்புல பலம் இல்ல...”

“அப்புறம் எப்படி சாமி உங்களால எங்களுக்கு உதவ முடியும்...”

“ம்.... பொறு தம்பி எனக்கு உடம்புல தெம்பு இல்லன்னாலும். தலையில கொஞ்சம் மூளை இருக்கு, அத வச்சு உங்களுக்கு உதவலாமுன்னு நினச்சேன்.”

“சரி.. சாமி ஏதுவா இருந்தாலும் சீக்கிரம் சொல்லுங்க.. நாங்க பொழுது போறதுக்குள்ள ஊரு போய்ச்சேரனும்...”

இப்போது அந்த ஞானி இளைஞனை பார்த்து ஒரு புன்னகை செய்து விட்டு, தொடர்கிறார்...

“சரி தம்பி அந்த மூட்டையில என்ன இருக்கு?”

“அதுவா, சாமி... தேங்காய் இருக்கு”

“எத்தனை தேங்காய் இருக்கு?

“210 தேங்காய் சாமி...”

“ஓ.... 210 தேங்காய் இருக்கா!!!”

 “ஆமாம்... சாமி...”

“சரி... நீங்க மொத்தம் எத்தனை பேரு...”

“நாங்க 70 பேருதான் சாமி இருக்கோம்.....”

“ஓ.... அப்படியா!!! உங்க எண்ணிக்கைய விட தேங்க்காயோட எண்ணிக்கை அதிகமா இருக்கு. அதுனாலதான் எல்லா தேங்க்காயவும் ஒரே மூட்டையா கட்டி தூக்கிட்டு போறீங்க நான் சொல்றது சரியா...”

ஏ.... சாமி... இத சொல்லத்தான் எங்கள இவ்வளவு நேரம் நிறுத்தி வைச்சு பேசிட்டு இருந்திங்களா....?

என்று கோரசாக 70 பேரும் அவரை நோக்கி கேட்டார்கள்.

இதற்கும்... அந்த ஞானி புன்னகைத்து விட்டு

 தொடர்கிறார்...

“சரி இப்ப... அந்த மூட்டைய பிரிங்க”

 “எதுக்கு சாமி....”

“பிரிங்க சொல்றேன்.....”

கட்டு அவிழ்க்கப் பட்டது..

“சரி இப்ப ஆளுக்கு மூனு.. மூனு... தேங்காயை எடுதுக்கங்க…”

“எதுக்கு சாமி....”

 “எடுங்கப்பா சொல்றேன்”

இப்போது எல்லோரும் எடுத்தாகிவிட்டது... மூட்டையும் காலியாகி இருந்தது. இப்பொழுது அந்த ஞானி அவர்களைப் பார்த்து இப்போது நீங்கள் அனைவரும் உங்கள் ஊருக்கு செல்லுங்கள்... என்கிறார்...

“சரி சாமி... எங்க மூட்டையில்லாம... எப்படி சாமி போறது...”

“ஓ.... அப்படியா?”

“இந்த சாக்குப்பையவும் உங்க கூடவே எடுத்துட்டுப் போங்க....

ஊருக்கு போனதும்... உங்க கையில இருக்கிற தேங்காய் எல்லாத்தையும் சாக்குப்பையில போடுங்க.... முன்ன இருந்த மாதிரியே மூட்டை உருவாகிடும்...”

சரிங்க சாமி அப்படியே செய்யிறோம் என்று கோரசாக கூறிவிட்டு அவர்கள் ஊரை நோக்கி நடந்தார்கள்...

பாவம்... ஞானிக்குதான் தலையில் இருந்த கொஞ்ச முடியும் கொட்டிப்போய் இருந்தது...

பின் குறிப்பு: இதுமாதிரியான பல புத்திசாலிகளை நாம் அனைவரும் எதாவது சூழ்நிலையில் சந்திக்க வேண்டி இருக்கிறது. நான் பலமுறை சந்தித்தும் அதன் விளைவாக சிந்தித்தும் இருக்கிறேன்.

No comments: