6.26.2014

எதுவும் பழகிவிடும் சில நாட்களில்?

ஒரு ஊரில் ஒரு செல்வந்தர் அவர் மனைவி மற்றும் ஒரு மகனுடன். நல்ல சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் அந்த செல்வந்தர் ஒரு நாள் காட்டுக்கு செல்ல நேரிடுகிறது.

காட்டுக்குச் சென்ற அவர் வேண்டாத செயலில் ஈடுபட்டு ஒரு முனிவரின் சாபத்துக்கு ஆளாகிறார். முனிவர் அவருக்கு இட்ட சாபமானது இன்னும் 3 மாதத்தில் பன்றியாக மாறிவிடுவாய். அந்த சாபத்துடன் வீடு திரும்பிய செல்வந்தர்.

தனது மகனையும், மனைவியையும் அழைத்து தான் காட்டில் முனிவருக்கு இழைத்த தீங்கையும், அதனால் கோபமடைந்த முனிவர் தனக்கு இட்ட சாபத்தையும், கூறிவிட்டு தன்னுடைய நிலையை நினைத்து வருந்துகிறார், எஞ்சி இருக்கும், நட்களுக்குள் அவரது கணக்கு வழக்குகள் மற்றும் இதர கடமைகளையும், முடித்துவிட்டு பன்றியாக மாறும் அந்த நாளை நோக்கி வருந்தி காத்திருந்தார்.

அவர் தனது மகனை அழைத்து, முனிவர் இட்ட சாபத்தின் படி தான் பன்றியாக மாரியவுடன், என்னை வெட்டிக்கொன்று விட வேண்டும். என்றும் ஏனென்றால் தன்னால் அந்த அருவருக்கத்தக்க உருவத்தையும்,அந்த வாழக்கையையும், வாழ முடியாது, எனவும். எனவே தான் இட்ட கட்டளையை நிறைவேற்றியே தீரவேண்டும். என்றும் மகனிடம் சத்தியம் வாங்கிவிடடு, காட்டை நோக்கி சென்றுவிடுகிறார்.

சில நாட்களில் அவர் பன்றியாகவும், மாறிவிடுகிறார்.

மகனானவன், தனது தந்தைக்குக் கொடுத்த வாக்கினை நிறைவேற்றும், பொருட்டு பன்றியாக மாறிவிட்டத் தந்தையைக் கொன்றுவிட காட்டைநோக்கிப்புறப்படுகிறான்.

காட்டில் பற்றிகள் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கு சென்று அப்பா!.. அப்பா!.. என்று அழைப்பான். அங்கிருந்த எந்த பன்றியும் அவனை நோக்கி வரவில்லை. அவனாலும் பன்றியாக இருக்கும் தனது தந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை.

அவனும் 6 மாத காலம் காட்டில் தங்கி பன்றியாக மாறிய தனது தந்தையை இடைவிடாது.தேடிக்கொண்டே இருந்தான்...

அப்படி இருக்கையில் ஒரு நாள் பக்கத்துக்காட்டில் சென்று அங்கே வசிக்கும் பன்றிக் கூட்டத்தின் நடுவே நின்று அப்பா!.. அப்பா!.. என்று அழைத்தான்.

அப்பொழுது, அவனது குரல் கேட்டு அவனை நோக்கி பன்றி ஒன்று ஓடி வந்தது... வந்த பன்றியானது! தனது தந்தை என்று கண்டுகொண்டான்.

வந்த பன்றியானது! தன் மகனைப்பார்த்து ஆனந்தத்துடன் மனைவி மகனின் நலம் விசாரித்து விட்டு ஏன் தன்னைக் காணவர இவ்வளவு நாட்கள் ஆனது என்று மகனிடம் கேட்டது.

மகனோ! நான் இந்த காட்டுக்கு வந்து 6 மாத காலம் ஆகிவிட்டது! என்றும் தங்களை காண இப்போதுதான் முடிந்தது.. என்றும் விளக்கம் அளித்தான்.

காலதாமதம் ஆகியிருந்தாலும்! தங்களுக்கு நான் செய்த சத்தியத்தை நிறைவேற்றுவேன்! தந்தையே என்றான். கண்களில் கண்ணீர் வழிய!

கொஞ்சம் பொறு மகனே!

என்று கூறிவிட்டு அங்கு மேய்ந்து கொண்டிருந்த பன்றிக்கூட்டத்தின் நடுவே யாருக்கோ சைகை காட்டியது...

அப்பொழுது அவர்களை நோக்கி இன்னொறு பன்றியும், அந்தப் பன்றிக்கு பின்னாலேயே பத்து குட்டிகளும் ஓடிவந்தது.

மகனே! இவர்கள் தான் உன் சித்தியும் தம்பி,தங்கைகளும், என்று அறிமுகப்படுத்தி வைத்தார்...

நீ வர கால தாமதம் ஆனதாலும் இவள் எனக்கு ப்ரொபோஸ் செய்த விதம் புடித்துபோய் விட்டதாலும், நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டு எங்களது புகழை ஓங்கச்செய்து விட்டோம்.

அதற்கு சாட்சியாக உனது தம்பி, தங்கைகளும் பிறந்து விட்டார்கள், எனவே நான் இங்கு சந்தோசமாகவும், சீரு, சிறப்புடன் வாழ்கிறேன்.

எனவே எனது சத்தியத்தை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் மகனே!

நீ வந்த வழயாகத் திரும்பிச்செல்!!!.. என்று கூறிவிட்டு தனது மனைவி மற்றும் குட்டிகளுடன் காட்டுக்குள் சென்றுவிட்டது...

(முற்றும்)


(ஒரு சூல்நிலையில் சில காலம் வாந்துவிட்டால்! அந்த சூழலுக்கு ஏற்ப மனித மனமும் மாறிவிடும்..)


நன்றி!      மீண்டும் சந்திப்போம்.. அடுத்த பதிவில்
(நேரம் இருந்தால் உங்கள் கருத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்)

------------------------------------------------------------------------------------------------------------

எதுவும் சிலகாலம்!

எதுவும் மாறும்!

மாற்றம் ஒன்றே நிறந்தரம்!

மாறாதது எதுவும் இல்லை!

மாறாததுக்கு இவ்வுலகில் இடமில்லை!

2.16.2012

தமிழத்தில் ஏற்ப்படும் மின்வெட்டிற்கு உண்மையான காரணம் என்ன?

தமிழத்தில் தற்போது ஏற்ப்படும் மின்வெட்டிற்கான  உண்மையான காரணம் என்ன?


இந்த கட்டுரை  ஒரு இறக்குமதி சரக்கு.

இந்த கட்டுரையை சிறுதுளி எழுதவில்லை. ஆனால் இந்த செய்தி அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும். என்பதை சிறுதுளி விரும்புகிறது. இதன் பொருட்டே இந்த கட்டுரையை பிரதி எடுத்து பிரசுரிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்ப்பட்டு உள்ளது. என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


தமிழகத்தில் தற்பொழுது  தலைவிரித்து ஆடும் மின்சரப்பற்றக்குறைக்கு உண்மையான காரணங்கள் என்னவென்று  தகுந்த விளக்கத்துடனும் தெளிவாகவும் நமக்கு  திரு. சா. காந்தி (ஓய்வுபெற்ற மின் பொறியாளர்)  கூறியிருக்கிறார்கள்.

தமிழத்தில் தற்போது ஏற்ப்படும் மின்வெட்டிற்கு உண்மையான காரணம் என்ன? 


1. கடந்த மூன்று ஆண்டுகளாவே தமிழகத்தில் மின்சாரப் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது. நம் தேவைக்கும் உற்பத்திக்கும் இடையில் உள்ள இடைவெளியை விளக்குவீர்களா? துறைரீதியாக இதனைப் பட்டியலிட முடியுமா?


தொடர்ச்சியாகவே இடைவெளி சுமார் 2500 மெகா வாட்டாக இருந்து கொண்டிருக்கிறது. இரவு நேரங்களில் மின் தேவை குறைவு. ஆனால் இப்பொழுது இரவில் கூட தேவையை நிவர்த்தி செய்ய முடியாத நிலைதான் உள்ளது. இரவு நேரங்களில் உள்ள இந்தப் பற்றாக்குறை பெரும்பாலும் விவசாயத்துறையைப் பாதிப்பதாக உள்ளது. தொழில்துறைக்கு பொதுவாக 30% பற்றாக்குறை உள்ளது. பிப்ரவரி தொடக்கத்தில் இருந்து அறிவிப்பில்லாத மின்வெட்டு தனியார் மின் நிலையங்களால் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது. உற்பத்தித் திறன் இருந்தும் குறிப்பாக நான்கு தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.


2. யார் அந்த நான்கு நிறுவனங்கள்? எதற்கு இந்த உற்பத்தி நிறுத்தம்?


* பிள்ளைப் பெருமாநல்லூர் (பி.பி.என் 330 மெகாவாட்)


* ஜி.எம்.ஆர் வாசவி (196 மெகாவாட்)


* மதுரை பவர் (106 மெகாவாட்)


* சாமல்பட்டி (105.6 மெகாவாட்)


மொத்தம் 737.6 மெகாவாட்.


மின்வாரியத்தில் இருந்து தங்களுக்கு சேர வேண்டிய நிலுவை தொகைக்காகவே இந்த உற்பத்தி நிறுத்தம். இந்த நிலுவை தொகைகள் பெரிய அளவில் இல்லை என்றாலும் கூட தமிழக மக்களைப் பிணை வைத்து மின்வாரியத்தை இக்கட்டிற்குத் தள்ளியிருக்கிறார்கள்.


இதில் கொடுமை என்னவென்றால் பிபிஎன் நிறுவனம் மின் உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டுவரும் இந்த நேரத்திலும் மின் வாரியம் தினமும் இந்த நிறுவனத்திற்கு ஒரு கோடி ரூபாய் தந்தாக வேண்டும் என்ற ஒப்பந்தம் உள்ளது. இந்த நிறுவனம் அப்போல்லோ மருத்துவமனை முதலாளிகளுக்கு சொந்தமானது.


3. மின் உற்பத்தி தொடர்ச்சியாகக் குறைந்து இருப்பதற்கான காரணம் என்ன?


நடுவன் அரசின் மின்சாரக் கொள்கையே இதற்குக் காரணம். 1992 ஆண்டிற்குப் பிறகு எதிர்கால மின் உற்பத்தி அனைத்தையும் தனியார் மட்டுமே மேற்கொள்ளலாம் என்பது தான் அது. அனைத்து மின் வாரியங்களின் புதிய மின் உற்பத்தித் திட்டங்கள் ஒட்டு மொத்தமாக மறுக்கப்பட்டன. அதன் விளைவையே இன்று நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.


4.தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் தனியார் மின்சார உற்பத்தி நிறுவனங்களுக்கு சாதகமாகவும், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்க்கு பாதகமாகவும் நடந்து கொண்டதற்கான எடுத்துக்காட்டுகளைக் கூறமுடியுமா?


ஏராளமாகக் கூறமுடியும். கடந்த ஐந்து ஆண்டுகளில் நடைபெற்ற நூற்றுக்கும் மேற்பட்ட தனியாருக்கும் மின்வாரியத்துக்கும் இடையிலான வழக்குகளில் தனியாருக்கு சாதகமாகவே ஒருதலைப்பட்சமாக ஆணையம் தீர்ப்பு வழங்கிவந்துள்ளது.


இந்த வழக்குகளில் பெரும்பாலானவை நூறு கோடி ரூபாயிக்கு மேல் வாரியத்துக்கு இழப்பை ஏற்படுத்துபவை. மிகக் குறிப்பாக, ஜி.எம்.ஆர் வாசவிக்கு வழங்கப்பட்ட 484 கோடி ரூபாய்க்கு தீர்ப்பு, பிபிஎன் 189 கோடி ரூபாய் கேட்ட வழக்கில் 1050 கோடி ரூபாய் இழப்பீடு கொடுக்கச்சொல்லி வழங்கிய தீர்ப்புகள் இதை உறுதிப்படுத்துகின்றன. இவை இரண்டும் உயர்நீதிமன்றத்தின் தடையையும் மீறி சுய ஆர்வத்தின் அடிப்படையில் ஆணையம் வழங்கிய தீர்ப்புகளே.


ஆணையத்தின் மீது எங்கள் அமைப்பு கடந்த ஜூலையில் ஒரு ஊழல் புகார் மனுவை முதலமைச்சரிடம் சமர்பித்துள்ளது. பிரச்சனையை அறிந்து மக்கள்தான் ஆணையத்தின் போக்குகள் குறித்து சிந்திக்க வேண்டும்.


தமிழ்நாட்டில் நிலவிவரும் மின்சாரப் பிரச்சனையை தீர்க்க கூடங்குளம் அணுமின் திட்டத்தால் மட்டுமே முடியும் என்ற கருத்து சமீப காலமாக சிலரால் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த கருத்து சரிதானா?


பைத்தியக்காரத்தனமானது. கூடங்குளத்தில் இருந்து நமக்கு கிடைக்கவிருப்பது 462 மெகாவாட்தான். இன்று நான்கு தனியார் மின் நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது மூலமாக 737 மெகாவாட் இழப்பை ஏற்படுத்தியுள்ளார்கள். 2010ஆம் ஆண்டு உற்பத்தி தொடங்கியிருக்க வேண்டிய 2700 மெகாவாட் மின்வாரிய உற்பத்தி நிலையங்களை நான்கு தனியார் மின் நிறுவனங்கள் கொண்டுவந்த செயற்கையான கடன் தொல்லையின் காரணமாக செயல்பாட்டுக்குக் கொண்டுவர முடியவில்லை. இந்த சூழ்நிலையில் இந்த நான்கு தனியார் நிறுவனங்கள் தமிழக மக்களைப் பிணைக்கதிகளாகப் பிடித்து வைத்திருப்பதை எதிர்க்காமல் கூடங்குளம் அணு மின் நிலையத்தை பற்றிப் பேசுவது பைத்தியக்காரத்தனமானது.


8. தடையற்ற மின்சாரம் என்பது தமிழ்நாட்டில் சாத்தியம்தானா?


சாத்தியம்தான். ஆனால் தற்போது நடைமுறையில் உள்ள மின்சாரச் சட்டத்தில் (2003) பெரிய மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும். அதாவது, மீண்டும் மாநில அரசிடம் மின்சாரத் துறை ஒப்படைக்க வேண்டும். மின்சார ஒழுங்குமுறை ஆணையங்கள் முழுமையாக நீக்கப்படவேண்டும்.


9. தமிழ்நாட்டின் மின்சார பிரச்சனையைத் தீர்க்க வழிதான் என்ன?


திட்டமிடப்பட்டுள்ள அனைத்து மின்வாரிய உற்பத்தி நிலையங்களும் திட்டமிட்ட காலத்திற்குள்ளே செயல்பாட்டுக்குக் கொண்டுவருவது தான் இதற்கான வழி.


நன்றி:
திரு. சா. காந்தி
ஓய்வுபெற்ற மின் பொறியாளர்
தலைவர் தமிழ்நாடு மின்துறை பொறியாளர்கள் அமைப்பு.


மேலே பிரசுரிக்கப்பட்ட கட்டுரையின்  லிங்க்: http://www.penmai.com/forums/general-discussions/16222-a.html  இந்த தளத்தில் இது போன்ற இன்னும் பலசெய்திகளும் இருக்கின்றன. முடிந்தால் சென்று படியுங்கள்.

அன்புடன்
சிறுதுளி

10.25.2011

மனிதனுக்கு மரணம் இல்லை




உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பது வல்லவன் வகுத்தது...

யார் ? அந்த வல்லவன். 

இறைவன்தான் அந்த வல்லவன்.

தர்மத்தின் வழியில் தனது வாழ்கையை நடத்தும் எவரையுமே?
எந்த துன்பமும் நெருங்காது.

தர்மத்தையும் தர்மத்தின் கொள்கையையும் பின்பற்றும் எந்தவொரு மனிதனுக்கும் மரணம் இல்லை.


10.04.2011

ஜோதிடம் உண்மையா?



ஜோதிடம் உண்மையா? என்ற இந்த கேள்வியை என்னிடம் யாரவது வந்து கேட்டால் எனது பதில் உண்மை என்றுதான் வரும்.

ஏனென்றால் நான் அனுபவப்பூர்வமாக அதை உணர்ந்து இருக்கிறேன். ஜோதிடம் உண்மையா? பொய்யா? என்று ஆராய்வதை விட ஜோதிடர்கள் உண்மையனவர்களா? பொய்யானவர்களா? என்று ஆராய்வதுதான் சாலச்சிறந்தது.

ஏனென்றால் ஜோதிடம் அறிவியலும் ஆன்மிகமும் கலந்தது. ஜோதிடம் என்றுமே தவறாகாது. ஏனென்றால் ஐம்புலன்களையும் அடக்கி தன் நலம் கருதாது பிறர்நலமே தன்நலம் என்று கருதி முற்றிலும் பொது நலத்திற்காகவே உருவாக்கப்பட்ட சாஸ்த்திர விதியாகத் திகழ்வதுதான் ஜோதிடம். அதில் தவறு இருக்க வாய்ப்பே இல்லை என்பது அடியவனின் கருத்தும் வாதமும். 

இன்று விண்வெளியை ஆராயும் முயற்ச்சியில்  ஓசோன் திரையை கிழித்து ஆராய்ச்சி என்ற பெயரில் நமக்கு நாமே பல இன்னல்களைத் தேடிக்கொண்டோம். தேடிக்கொண்டிருக்கிறோம். இன்னும் பல இன்னல்களையும், தேடிக்கொள்வோம் என்பதில் எந்த ஐயமும் இல்லை?

ஆனால் இவ்வளவு காலம் தேடியும், நம் முன்னோர்கள் சொல்லிவிட்டுச் சென்றதில் 5% அளவுகூட நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை? இன்னும் முயன்று கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் இன்னும் முடிந்த பாடில்லை. 

இந்த விண்வெளி தேடல்கள் அனைத்துமே நம் முன்னோர்கள் சொன்னது உண்மையா? பொய்யா? என்று ஆராயும் எண்ணத்தில் அரம்பித்ததுதான். என்றால் அது மிகையாகாது.  இப்போது நாம் செய்து கொண்டிருக்கும். விண்வெளி ஆராய்ச்சியில் என்ன ஆச்சர்யம் என்றால் முன்னோர்கள் சொல்லியதை ஆராய்ச்சி செய்து பார்த்ததில் அவர்கள் சொல்லியது முற்றிலும் உண்மையென்று எந்த வித ஐயமும் இன்றி நிரூபணம் ஆகி இருக்கின்றது. 

முன்னோர்கள் சொன்னது உண்மைதானா?
நாம் செய்த சில ஆராய்சிகளை இப்போது பார்க்கலாம்.

உலகம் தட்டை வடிவமானது என நம்பப்பட்ட காலத்தில், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, கோள்கள் வடிவத்தால் உருண்டையானது என்பதை புறநானூற்றுப்பாடலில்  "இனிது உருண்ட சுடர் நேமி முழுதும் ஆண்டார் வழிக்காவல' என்று உலகம் உருண்டையானது என்று கூறிவிட்டு போனார்கள் நம் முன்னோர்கள்.

அதன் பிறகு வந்த ஆர்யபட்டா என்ற இந்திய வானவியல் அறிஞர் ஏறக் குறைய கி.பி. 500ல் உலகம் உருண்டை உருண்டையானது.  மேலும் சூரியனை மய்யமாக வைத்து மற்ற கோள்கள் சுற்றி வருகிறது என்பதையும் கூறிவிட்டு போனார்.

(ஒரு உண்மை என்னவென்றால் எந்த ஒரு கருவியும் இல்லாமலேயே நம்மால் நம்ப முடியாத பல விசயங்களை சொல்லிவிட்டு போனார்கள் நம் முன்னோர்கள். அதனால் தானோ என்னவோ நமக்கு அவர்கள் மீது நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது போலும். ஆனால் முன்னோர்கள் சொன்னது எதுவும் பொய்யில்லை என்பது நிதர்சனமான உண்மை என்பதில் எவ்வித ஐயமும் நமக்குத் தேவையில்லை. நம் முன்னோர்களால் மட்டும் எப்படி இதையெல்லாம் சொல்ல முடிந்தது. என்பதை மற்றொரு பதிவில் விளக்கமாகவும் தெளிவாகவும் முன்னோர்களின் துணையோடு நான் உங்களுக்கு கூறவிருக்கிறேன்)

1.சாட்டிலைட் மூலம் விண்வெளியிலிருந்தும், சந்திரனிலிருந்தும் எடுக்கப்பட்ட படங்கள் உலகம் உருண்டை என்பதை நிரூபிக்கின்றன.

2. கி.பி. 400க்குப் பிறகு உலகம் தட்டையானது என்ற எண்ணமே மேலை நாடுகளில் நிலைத்து இருந்தது. இதனை இத்தாலி நாட்டைச் சேர்ந்த வானவியல் அறிஞர் கலீலியோ என்பவர். மறுத்தார். மறுத்தது மட்டும்மின்றி அதை நிரூபித்தும் காட்டினார். அதற்காக அவர். ஒரு பெரிய தொலை நோக்கியை உருவாக்கி  வானில் நிகழ்வதைப் பார்த்தார்.

பூமிக்கு சந்திரன் ஒருதுணைக் கோளாக இருப்பதைப் போல வியாழனுக்கும் 14 சந்திரன்கள் இருப்பதை அவர் கண்டார். அந்த துணைக்கோள்கள் அனைத்தும் வியாழனை சுற்றி வருவதை பார்த்தார்.

ஒரு கோளைச் சுற்றி துணைக்கோள்கள் செல்லும்போது நாம் மட்டும் எல்லாக்கோள்களும் பூமியைச் சுற்றுகிறது என ஏன் நினைக்க வேண்டும் என்ற கேள்வியை அவர் எழுப்பினர். சூரியன்தான் மய்யமாக உள்ளது. பூமி உள்பட எல்லா கோள்களும் சூரியனையே சுற்றி வருகின்றன என்று நிரூபித்து காட்டிவிட்டும் போனார்.

சரி பூமி உருண்டைதான் என்று நிரூபிக்க இன்னொரு சோதனை நடந்தேறியது அதை தெரிந்து கொள்ள மேலும் படியுங்கள்.

அது சரி மேலே போட்ட தலைப்புக்கும் இந்த ஆராய்சிக்கும் என்ன சம்பந்தம் இருக்கின்றது. என்று உங்களுக்குத் தோன்றினால் என்மீது நம்பிக்கை வைத்துப் படியுங்கள் பதிவின் முடிவில் உங்களுக்கே தெரியும்.

வாழ்கை என்னும் சக்கரமே, நம்பிக்கை என்னும் அச்சாணியில் தான்  சுத்துதுன்னு உங்களுக்கு நான் சொல்லித்தான் தெரியனுமா? என்ன?

வாங்க இப்ப அடுத்த ஆராய்ச்சியை பார்ப்போம்.... மேழே  பார்த்த ஆராய்ச்சிக்கும் இப்ப பார்க்கப் போற ஆராய்ச்சிக்கும் என்ன வித்யசம்முன்ன கலிலீயோ வானத்தை மையம்மா வைச்சு உலகம் உருண்டையின்னு நிருபிச்சாரு. மெகல்லன் தண்ணீரை மையம்மா வைச்சு நிருபிச்சாரு. 

உலகம் உருண்டை என்பதை மெய்ப்பிக்க கடல்வழியாகக் கப்பல் பயணம்செய்து காட்ட விரும்பினர் போர்ச்சுக்-கீசிய மாலுமி ஃபெர்டினாண்ட் மெகல்லன் வரைபடங்கள் மற்றும் காம்பசின் துணை கொண்டு கப்பலில் உலகைச் சுற்றி வரக் கிளம்-பினார். 5 கப்பல்களுடன் ஸ்பெயின் நாட்டுக் கடற்கரையிலிருந்து 10 ஆகஸ்டு, 1519 அன்று அவருடைய பயணம் தொடங்கியது. வழியில் நடந்த போரில் 17 ஏப்ரல் 1521 அன்று அவர் கொல்லப்பட்டார். அவருடன் பணி புரிந்த மாலுமிகள் தொடர்ந்து பயணத்தை மேற்கொண்டு வந்தனர். ஆனால் புறப்பட்ட 5 கப்பல்களில் ஒருகப்பல் மட்டும் 6, செப்டம்பர் 1522 அன்று ஸ்பெயினுக்கு வந்து சேர்ந்தது. இது உலகம் உருண்டை என்பதை சிறிதும் ஐயமில்லாமல் மெய்ப்பித்தது.

அடுத்த ஆராய்ச்சி


1.சந்திரன் நீர்கிரகம் என்று நம் முன்னோர்கள் ஜோதிடத்தின் மூலம் சொல்லிவிட்டு சென்றார்கள். அதை நாம்  ரூ. 400 கோடிக்குமேல் செலவு செய்து அவர்கள் சொன்னது உண்மையென்று கண்டுபிடித்துவிட்டோம்)

நிலவில் தண்ணீர் இருப்பதாக இந்தியா அனுப்பிய ஆளில்லாத செயற்கைக்கோள் சந்திரயான் -1 கண்டுபிடித்துள்ளது. விண்வெளி ஆராய்ச்சி மற்றும் நிலவு ஆராய்ச்சியில் மிக முக்கியமான கண்டுபிடிப்பாகவும் சாதனையாகவும் இது கருதப்படுகிறது.

இதுபோன்ற இன்னும் ஏராளமான ஆராய்ச்சியில் நம் முன்னோர்கள் ஆராய்ந்தது மட்டும்மில்லாமல் அதை சுவடிகளில் எழுதி நமக்காக விட்டுவிட்டும் சென்றார்கள்.

ஆனால் அதை நம்மால் முழுவதும் நம்பமுடியவில்லை. அதன்விளைவாக அவர்கள் சொன்னது உண்மைதானா? என்று ஆராய்ந்தும் பார்த்தோம். உண்மையென்று அறிந்தும் கொண்டோம்.

அதன் பிறகாவது நமது ஆராய்ச்சிகளை விட்டோமா? என்றால் இல்லை.... இன்னும் வேறென்ன சொல்லிவிட்டு சென்றார்கள் என்று பார்த்து விட்டு அதுவும் உண்மைதானா? என்று ஆராய்ச்சி செய்ய கிளம்பிவிட்டோம்?

சாதரணமாக நமது வீட்டில் சோறு வடிப்பதற்கு முன் பானையில் வெந்து கொண்டிருக்கும் ஒரு சோறை எடுத்து பதம் பார்ப்போம். எதற்க்காக சோறை சரியான பதத்தில் அரிசி வெந்து விட்டதா? இல்லை வேக பத்தாமல் இருக்கிறதா? என்பதற்காகதானே நாம் அந்த சோதனையில் ஈடுபடுகின்றோம்.  பிறகு என்ன செய்வோம். சரியான பதத்தில் சோறை வடித்துவிட்டு உணவாக உண்போம் சரிதானே? இது தானே சரியான நடைமுறை.... அப்படியில்லாமல் சந்தேகப்பட்டு ஒவ்வொரு அரிசியையும் வேந்துருச்சா... வேந்துருச்சான்னு சோதனை செய்கின்றேன். என்ற பெயரில் எல்லா அரிசியையும் சோதனை செய்து கொண்டே இருந்தால் நீங்கள் எதை உண்ணுவீர்கள்? சரி இந்த சோதனை யாருக்குத்தான் பயன்படப்போகின்றது?

சரி இப்ப விசயத்துக்கு வருவோம்.....

இதுவரை நீங்கள் படித்ததில் இருந்து ஒரு விஷயம் நன்றாக புலப்பட்டிருக்கும். நம் முன்னோர்கள் சொன்ன விஷயங்கள் எல்லாமே? சரியாகத்தான் இருதிருக்கிறது. ஆனால் இந்த ஜோதிடம் மட்டும் எப்படி பொய்யாக இருக்க முடியும்? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். வேண்டுமென்றால் இப்படிச்சொல்லலாம் ஜோதிடர்கள் பொய்யானவர்கள் ஜோதிடம் பொய்யல்ல!


என்றும் அன்புடன்

சிறுதுளி  






9.05.2011

தர்ம சங்கடம் என்றால் என்ன?


அனைவருக்கும் வணக்கம்,

நம்மில் பலரும்  சில இக்கட்டான சூழ்நிலையில் உபயோகிக்கும். சில சொற்களில் இந்த தர்மசங்கடம் என்ற சொல்லும் கண்டிப்பாக இடம்பெறும்.  அனேகமாக இந்த சொல்லை உபயோகிக்கும் நம்மில் பலருக்கு இதன் உண்மையான அர்த்தம் தெரியாது. இந்த சொல் எப்படி வந்தது. இந்த சொல்லை எந்த மாதிரியான சம்பவங்களுக்கு பயன் படுத்தலாம். என்பதை ஒரு கதையின் மூலம் நாம் அறிந்துகொள்ளலாம்.

தர்மரின் சங்கடம் 

மகாபாரதத்தில் கௌரவர்கள் மற்றும் பாண்டவர்கள் என்ற இரண்டு பிரிவினர்கள் இருந்தார்கள். என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இதில் பாண்டவர்கள் பிரிவில் மூத்தவரான தர்மர் ஒருநாள் தனிமையில் இருக்க வேண்டி காட்டுக்குள் தனியாகச் சென்றுகொண்டிருந்தார். கட்டுக்குள் நீண்ட தூரம் சென்று விட்டார். அப்போது அங்கு இரண்டு காட்டுவாசிகள் மிகவும் சிரமப்பட்டு தங்களின் உணவுக்காக சில ஆமையை நெருப்பில் போட்டு வேகவைக்க முயற்சி செய்து கொண்டிருதார்கள். இதை அருகில் சென்று கவனித்த தர்மருக்கு சங்கடமாக இருந்தது. அந்த காட்டுவசிகளுக்கு கடுமையான பசி அதன் பொருட்டே அவர்கள் அந்த ஆமைகளை உணவாக்க நினைத்தார்கள். ஆனால் அந்த ஆமைகளை  நெருப்பில் அவர்கள் போட்டவுடன் அந்த ஆமைகள்  நெருப்பை விட்டு வெளியே வந்துவிடுகிறது. அவர்கள் மீண்டும் நெருப்பில் இடுவதும் அந்த ஆமைகள் நெருப்பை விட்டு வெளியே வருவதும் என மீண்டும்... மீண்டும்... அந்த சம்பவம் நடந்து கொண்டே இருந்தது. அதை அங்கிருந்து கவனித்துக்கொண்டிருந்த தர்மர் எதுவும் கூறாமல் அங்கிருந்து கிளம்பி விட்டார். சரி இதில் தர்மருக்கு என்ன சங்கடம்? அந்த காட்டுவாசிகளுக்கு பயங்கரமான பசி அதை தீர்த்து வைக்கும் பொறுப்பு தர்மருக்கு இருக்கிறது. அதற்காக அவர் அந்த காட்டு வாசிகளுக்கு அந்த ஆமைகளை மல்லாக்க போட்டு வேகவையுங்கள் என்று கூறினால் போதும் அவர்கள் பசி ஆறிவிடும் (ஆமையை மல்லாக்க கவிழ்த்துப் போட்டால் அதனால் திரும்ப முடியாது. மேலும் ஆமையின் முதுகு ஓடு மிகவும் வலிமையானது. தீயில் வெந்தாலும் ஓடு எரியாது. ஆனால் மற்ற பாகங்கள் வெந்து உணவாக, அந்த ஓடே சட்டி போன்று பயன்படும்.) இந்த சூச்சுமத்தை தர்மர் அந்த காட்டுவசிகளுக்கு கூறியிருந்தால் அவர்களின் பசி தீர்ந்து இருக்கும். ஆனால் அவர் சொல்லவில்லை காரணம் அந்த ஆமைகளின் உயிரை காக்கும் பொறுப்பும் தர்மருடையதுதான். ஏனென்றால் தர்மர் எமதர்மராஜாவின் அவதாரம் இந்த இரண்டு விசயத்தில் அவர் யாருக்கு உதவ முடியும். தர்மருக்கு நேர்ந்த இந்த இக்கட்டான சங்கடத்தையே தர்மர் சங்கடம் என்று கூறப்பட்டது. இதுவே பிற்காலத்தில் மருவி தர்மசங்கடம் என்ற சொல்லாகி விட்டது.

நன்றி மீண்டும் சந்திப்போம்.

6.08.2011

கடவுள் நம்பிக்கை சரியா?

கடவுள் மீது நம்பிக்கை வைப்பது சரியா?

இதைப்பற்றி ஆராய்ந்தால், கடவுளை இதுவரை யாரெல்லாம் பார்த்து இருக்கிறார்கள். 

நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா??????

நானும் பார்த்தது இல்லை?????

நீங்களும் பார்த்தது இல்லை நானும் பார்த்தது இல்லை ஆனால் நம்புகிறோம், சரி  கடவுளை பார்க்க முடியாது. உணரத்தான் முடியும். என்று பலர் கூறியும் வாதாடியும், பார்த்தும் இருக்கிறேன், கேட்டும் இருக்கிறேன். சரி உங்கள் வழிக்கே  வருகிறேன். நீங்கள் கடவுளை உணர்ந்து இருக்கிறீர்களா??? நானும் உணர்ந்ததது இல்லை? சரி பிறகு எப்படித்தான் கடவுள் இருப்பதை உறுதி செய்து கொள்வது... என்னிடம் பல கேள்விகள் உண்டு, அதில் சிலவற்றை உங்களிடம், பகிர்ந்து கொள்கிறேன். 

கேள்வி எண் (1)  பிறப்பு எங்கே நிர்ணயிக்கப் படுகின்றது ?
கேள்வி எண் (2)  இறப்பு எங்கே நிர்ணயிக்கப்படுகின்றது ?
கேள்வி எண் (3)  சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை யார் நிரனயித்தது ?
கேள்வி எண் (4)  இந்த உலகம் எப்படி இயங்குகின்றது. யார் அதை இயக்குவது?
கேள்வி எண் (5)  காற்று இருப்பது உண்மை அது எங்கிருந்து வருகிறது?
கேள்வி எண் (6)  நீர் இருப்பது உண்மை அது எப்படி உருவானது?
கேள்வி எண் (7)  நெருப்பு இருப்பது உண்மை அது எங்கிருந்து உருவாகின்றது?
கேள்வி எண் (8)  உயிர் என்பது எது ?
கேள்வி எண் (9)  நல்லது எது? கேட்டது எது?
கேள்வி எண் (10)  விதை இருக்கிறது. மரம் அதற்குள் எங்கே இருந்தது?

இன்னும் பல கேள்விகள் இருக்கின்றன. மரியாதையை நிமித்தமாக இத்துடன் எனது கேள்விகளை நிறுத்திக்கொள்கிறேன்.

மேலே நான் கேட்ட கேள்விகள் எனக்குள் எழுந்தது, நானும் பல வழிகளில் விடை தேடிப்பார்த்தேன். அறிவியலும் பல விளக்கங்கள் தந்தது. ஆனால் உண்மையான விளக்கம் யாராலும் தர முடியவில்லை. எல்லாம் ஒரு லிமிட் தான். 

அப்போது தான் என்னால் ஒத்துக் கொள்ள முடிந்தது. நமக்கும் மேல் எதோ ஒரு சக்தி இருக்கிறது. அது ஏன் கடவுளாய் இருக்ககூடாது. 

சரி ஒருவழியா... கடவுள் இருக்காரா இல்லையாங்கிறத பட்டி மன்றத்துல சொல்ற தீர்ப்பு மாதிரி சொல்லி முடிச்சாச்சு.

சரி கடவுளை நம்புவது சரியான்கிற  தலைப்ப பத்தி பேசவே இல்லையே இதோ  இப்ப பேசிடுவோம்...

கவுன்ட் ஸ்டார்ட் 
1....
2.... 
3....
4....
5....
6....
7....
8....
9....
10....

நம்பிக்கைதான் சார் சார் வாழ்க்கை இன்னைக்கு படுத்து தூன்குறோம்... நாளைக்கு எப்படி எழுந்திருப்போம்ன்னு எப்படி நம்பி தூன்குரோமோ அப்படித்தான்.  நாம கடவுளையும் நம்பனும். நம்பித்தான் ஆகணும் 
வேற வழியே இல்லை....

உதாரணத்திற்கு இந்த உலகத்துல 97% தண்ணீர் 3% தான் மண்ணும், கல்லும், அதுல கூட நாம கொஞ்ச இடத்துலதான் வழ்துட்டு இருக்கோம்.  97% தண்ணியில கொஞ்சம் தலும்புனாக் கூட நாம எல்லாரும் காலி ஆனாலும் எந்த நம்பிக்கையில வாழ்த்துட்டு இருக்கிறோம். அதுமாதிரித்தான் கடவுளையும் நம்பனும்.

இன்னும் நிறைய உதாரணம் இருக்கு. அதெல்லாம் நமக்கு இப்போதைக்கு இது போதும்னு நினைக்கிறேன். இன்னும் நிறைய உதாரணம் வேணும்னு நினைக்கிறவங்க பின்னுட்டத்துல கேளுங்க பதில் தறேன்.

அன்புடன்
சிறுதுளி 

5.05.2011

யூடியூப் வீடியோவை சுலபமா டவுன்லோட் செய்ய ஒரு தளம். (How to download YouTube Vedio)



நமக்கு ஒரு பாட்டு புடிச்சிருக்குன்னு வைச்சுக்குவோம். வெறும் பாட்ட மட்டும் கேட்கனும்னு நினைச்சா அதுக்கு நிறைய வேப்சைட்டுங்க... இருக்கு.  அதையெல்லாம் நாம சாதாரணமா டவுன்லோட் செய்து கேட்டுருவோம்.

ஆனா வீடியோவோட பாக்கனும்னா என்ன பண்ணுவோம்.???

சரி நானே சொல்றேன்.......

கூகுளுக்கு போயி அங்கே நமக்கு தேவையான பாடலின் வரியை டைப் செய்து தேடுவோம் சரிதானே???

தேடினால்... கூகுள் என்னபண்ணும். ?

நாம தேடியது சம்பாந்தமான வீடியோ பாடல்கள் யூடியூப்புல இருக்குன்னு காட்டும். நாம அந்த வீடியோவுக்கான லிங்கை அழுத்தினால். அது நேராகப்ப்போய் யூடியூப் தலத்தில் போய் நிற்கும்.

அதுக்கு பதிலா நாம நேரா நூல் புடிச்சமாதிரி http://www.youtube.com/  என்ற இணைய தளத்திற்கு போனால்... கீழ்க்கண்டமாதிரி ஒரு திரை வரும்


இந்த திரையில search ன்னு போட்டு இருக்கிற பொத்தானுக்கு முன்னால இருக்குற பாக்சுல நமக்கு தேவையான பாடலின் படத்தோட பெயரை டைப் செய்து search என்ற பொத்தனை  அழுத்தினால் (உதாரனத்திற்க்கு Koyla என்ற இந்தி படத்தின் பாடல்களை கேட்க நினைக்கின்றோம். என்று வைத்துக்கொள்வோம். search பக்சுல Koyla என்று  டைப் செய்து search என்ற பொத்தனை  அழுத்தினால் போதும்  Koyla படத்தின் அனைத்து வீடியோப் பாடல்களும்  கீழே உள்ள திரையில்  இருப்பது போல் நமக்கு காட்டும்.

அதில் நமக்கு எந்தப்பாடல் பிடிக்கிறதோ அந்தப்பாடலை க்ளிக் செய்யவேண்டும்.



பிறகு நாம் தேடிய பாடல் கீழே உள்ள திரையில்  உள்ளது போல் யூடியூப் ப்ளேயரில் ஓட ஆரம்பிக்கும்.



ஆனால், ஒரே சீராக ஓடாது... அதற்க்கு மாறாக விட்டு விட்டு காட்சிகளைக் காட்டி நம்மை வெறுப்பேத்தும், இன்னும் சற்று குறைவான வேகமுடைய இன்டர்நெட் சேவை என்றால் சொல்ல வேண்டாம். வெறுப்பின் உச்சக்கட்ட எல்லைக்கே போய்விடுவோம்.

சரி இதற்க்கு என்னதான் வழி.???

ம்.... அப்படி கேளுங்க...

நீங்க இப்படி கேப்பிங்கன்னு தெருஞ்சுதான். அதுக்கான வழியைக் கண்டுபிடிச்சுட்டு வந்துருக்கேன்.

சரி... இப்ப விஷயத்துக்கு வருவோம். பொதுவா நாம யூடியூப் வீடியோவை டவுன்லோட் செய்ய யூடியூப் டவுன்லோடேர் என்ற சாப்ட்வேரை பயன்படுத்துவோம்.

ஆனால் யூடியூப் டவுன்லோடேர் சாப்ட்வேரை பயன்படுத்தாமல் யூடியூப் வீடியோவை எப்படி டவுன்லோட் பண்றதுன்னு  சொல்றதுக்காகத்தான்  இந்தப் பதிவே....

சரி.... யூடியூப் டவுன்லோடேருக்கும் இந்த இணையதளதிற்கும் என்ன வித்தியாசம்.????

அப்படி கேளுங்க...

1. இந்த இணையதளத்தில ஏற்கனவே சாப்ட்வேர் நிறுவி வைச்சு இருக்காங்க.

2. மத்த இணையதளம் மாதிரி user name & password, Email   Id பணம், எதுவுமே நாமத் தரத்தேவையில்லை முற்றிலும் இலவசம்.

3. யூடியூப் டவுன்லோடேர் சாப்ட்வேரை பயன்படுத்தி டவுன்லோட் செய்தோமானால் ஒரே ஒரு குவாலிடி பைல் தான் நமக்கு கிடைக்கும். அனால் இந்த இணையதளத்தை உபயோகப்படுத்தி நாம டவுன்லோட் செய்யும் போது நான்கு விதமான குவாலிடில நமக்கு கிடைக்குது.

4. மேலும் இன்னும் சில வேப்சைட்டுகளின்  வீடியோக்கள் மற்றும் படங்களையும் டவுன்லோட் செய்துகொள்ளமுடியும். (உதாரணமாக YouTube, Dailymotion, Metacafe, Break, Veoh, MySpace, Revver, Blip.tv, WeGame, Tangle, 5min, Game Trailers, LiveVideo.com, RuTube, FaceBook, Vimeo, current, Funny Or Die, eHow, Megavideo போன்ற தளங்கலில் இருந்தும்  வீடியோக்களையும் நாம்  டவுன்லோட் செய்துகொள்ளமுடியும்) 

5.  இந்த தளத்தில் மற்றவர்கள் டவுன்லோட் செய்யும் வீடியோக்கள் என்னென்ன என்பதையும் நாம் காணமுடியும். ஒருவேளை நமக்கும் அந்த வீடியோ தேவையென்றால் நாமும் அதை டவுன்லோட் செய்து கொள்ளலாம். இன்னும் பல அம்சங்கள் இந்த தளத்தில் உள்ளது.

சரி இப்ப மேலே நாம தேடி வைச்சு இருக்கிற வீடியோவை எப்படி டவுன்லோட் செய்வது இதைப்பத்திதான் இன்னைக்குப் பார்க்கப் போறோம்.

படத்தில் சிவப்பு நிறத்தில் 1  என்று குறிப்பிட்டுடிருப்பது.  யூடியூப்பில் நாம் தேடிய படத்தின் பெயர்.

படத்தின் பெயரை குறிப்பிட்டு நாம் தேடியதில் நமக்கு  அந்த படத்திற்குரிய பாடல்கள் அனைத்தும் காட்டப்பட்டது.

அதில் நமக்கு பிடித்த பாடலின் லிங்கை நான் தேர்வு செய்தோம்.

அதன்படி நாம் தேடிய  பாடல் பிளேயர் விண்டோவில் ஓடுகின்றது.

அனால் விடுப்பட்டு விடுப்பட்டு தான் கட்சிகள் தெரிகின்றது.

சீராக ஓடுவதற்காகவும், நாம் நினைத்தபோதெல்லாம் பர்ப்பதர்க்காவும் நாம் இந்த பாடலை டவுன்லோட் செய்யப்போகிறோம்.

எப்படி டவுன்லோட் செய்வது அதைப்பற்றித்தான் இப்போது பார்க்கப்  போகிறோம்.

சிவப்பு நிறத்தில் 2 என்று குறிப்பிட்டுடிருப்பது இந்தப் பாடலுக்கான லிங்க் (http://www.youtube.com/watch?v=tl7Gzd4L7Tw) இதை அப்படியே காப்பி செய்து கொண்டு http://www.savevid.com/ என்ற இந்த இணையதளத்திற்கு நாம் சென்றால்

கீழ்க்கண்டமாதிரி ஒரு திரை வரும்

அதில் நாம் காப்பி செய்து வைத்திருக்கும் லிங்கை சிவப்பு நிறத்தில் 1  என்று குறிப்பிட்டுடிருக்கும் இடத்தில் URL  என்று போட்டிருக்கும் இடத்திற்கு பக்கத்தில் உள்ள பாக்சில் பேஸ்ட் செய்ய வேண்டும். பிறகு 2  என்று குறிப்பிட்டுடிருக்கும் டவுன்லோட் பொத்தானை அழுத்தினால் சிறிது நேரத்தில் 1  என்று குறிப்பிட்டுடிருக்கும் இடத்தில் கீழ்கண்டவாறு காண்பிக்கும்

இதில் நான்கு வகையான குவாலிடியில் காட்டும்  (சில நேரங்களில் ஒன்று,  இரண்டு அல்லது மூன்று  குவலிட்டிகளை  மட்டுமே.  காட்டும். அது நாம் தேடும் வீடியோவின் ஒரிஜினல் குவாலிடியைப் பொறுத்து  கிடைக்கும்)  நமக்கு தேவையான குவாலிடி மீது க்ளிக் செய்தால் அது நமது கணினியில் எங்கு சேமிக்க வேண்டும் என்று கேட்கும் நாம் இடத்தை தேர்வு செய்து கொடுத்தால் நமது கணினியில் அது இறங்கிவிடும். இப்போது நாம் எப்போது வேண்டுமானாலும் அதைப்பார்த்துக் கொள்ளலாம்.

நன்றி,
அன்புடன்

சிறுதுளி
சென்னை