சொந்த வீடு கட்ட நினைப்பவர்கள், தாங்கள் கட்ட இருக்கும் கட்டடம் அமைந்த பகுதியிலுள்ள உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற வேண்டும் என்பது தெரியும் அல்லவா?
இதை வகுத்தது யார்?
சி. எம். டி. ஏ., என்றால் என்ன?
(சி. எம். டி. ஏ - சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம்)
(CMDA - Chennai Metropolitan Development Authority)
சி. எம். டி. ஏ., வின் பணி மற்றும் அதன் செயல்பாடுகளை பற்றி இங்கு தெரிந்துகொள்வோம்.
சி. எம். டி. ஏ., என்பது தமிழக அரசின் சட்டபூர்வமாக அதிகாரம் பெற்ற நிறுவனம்.
சென்னை பெருநகர் பகுதியில் திட்டமிட்டபடி வளர்ச்சியை வரைமுறைப்படுத்துவது இதன் முக்கிய பொறுப்பு. இந்த செயல்பாட்டுக்காக, சென்னை பெருநகரின் ஒவ்வொரு பகுதியிலும் அனுமதிக்கப்படும் நில உபயோகத்தை நிர்ணயிக்கின்ற முழுமை திட்டத்தை (Master Plan) இக்குழுமம் தயாரித்து அளித்துள்ளது.
சி. எம். டி. ஏ., வின் மேம்பட்டு பணிகள் என்ன?
கடந்த 1971ம் ஆண்டின் தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு சட்டத்தின்படி மக்களுக்கு பயன்படும் கட்டடங்களை கட்டுவது, நிர்வகிப்பது, கட்டுமான பொறியியல் பணிகளை
மேற்கொள்வது ஆகியவை, மேம்பாட்டு பணிகள் (உதாரணம், கோயம்பேடு வணிக வாளகம்).
இது தவிர, ஒரு மனையில், மனைக்கு மேல் மற்றும் கீழ் முழுமை திட்டத்தின் ஒரு பகுதியான, வளர்ச்சி கட்டுப்பாட்டு விதிகளில் தெரிவித்துள்ள உபயோகத்தில், வேறு மாற்றங்களை உள்ளாக்குவது போன்ற பணிகளை மேற்கொள்வதும், இதன் மேம்படுத்தப்பட்ட பணியாகும்.
திட்ட அனுமதி என்றால் என்ன? அதை பெறுவது எப்படி?
எந்த ஒரு கட்டுமானப் பணியையும் மேற்கொள்ளும் முன் அதற்க்கான திட்ட அனுமதி பெற்றிருக்க வேண்டும். இது, தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு சட்டத்தின் கீழ் அவசியமானது.
திட்ட அனுமதி கொடுக்கப்பட்ட நாளில் இருந்து, அந்த அனுமதி மூன்றாண்டுகளுக்கு செல்லத்தக்கது. இதை மேலும் மூன்றாண்டுகளுக்கு புதிபித்துக்கொல்ள்ளலாம். இதற்க்கு, அதன் செல்லத்தக்க காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
திட்ட அனுமதிக்கு இரண்டு வகையான விண்ணப்ப படிவங்கள் உள்ளன. மனைப்பிரிவிற்கு படிவம் - அ, மற்ற வளர்ச்சி பணிக்கு, படிவம் - ஆ.
இத்திட்ட அனுமதி விண்ணப்பங்களை சென்னை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
திட்ட அனுமதி பெற என்னென்ன ஆவணங்கள் இணைக்க வேண்டும்?
• கட்டுமான பணி குறித்த ஐந்து வரைபடங்கள் இணைக்க வேண்டும்.
• மனை அளவு, கட்டட அமைப்பு, இடைவெளி குறித்த தெளிவான விவரங்கள் அடங்கிய வரைபடம்.
• கட்டட தரைப்படம், பக்கவாட்டுத் தோற்றம், நடப்பு கட்டுமானம் (இருந்தால்), புதிய உபயோகம், வேறு உபயோக மாற்ற கோரிக்கை தொடர்பான விவரங்கள்.
• மனை அமைவிடத்தைக் காட்டும் வரைப்படம், உள்ளாட்சி அமைப்பால் அனுமதி பெற்ற கட்டட வரைவாளர், நில அளவையாளரின் கையொப்பம் இடம்பெற வேண்டும்.
• சம்மந்தப்பட்ட அதிகார அமைப்புகளிடம் இருந்து ஒப்புதல் கடிதம் வேண்டும்.
• மனையின் உரிமைக்கான கிரையப் பத்திர ஆவணம், குத்தகை பத்திர ஆவணம், பட்டா நகல்.
மேற்குறிப்பிட்ட தகவல்களில் சந்தேகம் ஏதேனும் இருந்தால், சி. எம். டி. ஏ., பொது தகவல் அலுவலரிடம் விளக்கம் பெறலாம்.
திட்ட அனுமதி விண்ணப்பத்தை எங்கு சமர்பிக்க வேண்டும்?
சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சிகள், நகராட்சிகள், சென்னை மாநகராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளில், அதன் அலுவலகங்களில் திட்ட அனுமதி விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.
எதன் அடிப்படையில் திட்ட அனுமதிக்கு அங்கிகாரம் தரப்படுகிறது?
விண்ணப்பமானது, முழுமை திட்டத்தில் குறிப்பிட்ட மனை அமைந்துள்ள நிலத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட நில உபயோகம் மற்றும் உத்தேசித்துள்ள உபயோகத்திற்க்கான, வளர்ச்சி கட்டுப்பட்டு விதிகளுக்கு ஏற்புடையதாக உள்ளதா என்ற அடிப்படையில் ஆய்வு செய்து, திட்ட அனுமதிக்கான விண்ணப்பம் பரிசீலிக்கப்படுகிறது.
விதிகளுக்கு ஏற்புடையதாக இருந்தால், திட்ட அனுமதி வழங்கப்படும். பெரிய வளர்ச்சிக்கான விண்ணப்பம், உள்ளாட்சி அமைப்புகள் மூலமே, நேரிடையாக சி. எம். டி. ஏ., வின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்படும்.
மேலும் விவரங்கள் தொடரும்...
நன்றி - தினமலர் நாளிதழ் - 25.12.2010
No comments:
Post a Comment